சேலத்தில் 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த நபரை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். சேலத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவியை, அவரது பள்ளி வேன் டிரைவரான ரமேஷ் என்பவர் காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இந்த சூழலில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய, சிறுமியை பெங்களூருவிற்கு கடத்தி சென்ற அவர், திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார், ரமேஷை சுற்றி வளைத்து கைது செய்து சேலம் கொண்டுவந்தனர். இதில், மீட்கப்பட்ட சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்யப்பட்ட ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.