Bank jewelry issue || கனரா பேங்க்கில் 130 சவரன் நகை அடகு - கஸ்டமருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2025-06-24 07:40 GMT

திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் கனரா வங்கியில் 1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான போலி நகைகள் அடகு வைத்தது தொடர்பாக டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. வங்கி உதவி பொது மேலாளர் வின்ஜமுரி கொடுத்த புகாரின் அடிப்படையில், நகை மதிப்பீட்டாளர் அங்கணன், தங்கராஜ், கருப்பையா, பாண்டிகுமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த சோனாஸ்ரீ, அடகு வைத்த 130 சவரன் நகையில் 9.5 சவரன் கவரிங் நகையாக உள்ளது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர், நகை வாங்கிய ரசீது உள்ளிட்ட ஆவணங்களுடன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்