சென்னையில் 120 புதிய மின்சார பேருந்து சேவை-இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை மாநகரில் 207 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 120 புதிய மின்சார பேருந்து சேவையை 47.50 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வியாசர்பாடி பணிமனையில் இருந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வண்ணம் 40 க்கு மேற்பட்ட வழித்தடங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் வியாசர்பாடி, பெரும்பாக்கம், சென்ட்ரல், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை ஆகிய 5 பணிமனைகளில் இருந்து மின்சார தாழ்தள பேருந்துகளுக்கான சார்ஜிங் பாயின்ட்கள் அமைத்து மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது . மின்சார பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்துமே தனியார் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.