கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு மாணவனை வலுக்காட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக எழுந்த புகாரில் 12ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவனை, அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 8 மாணவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாகவும், அதனை வெளியில் கூறக்கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் லலித் குமார், அனைத்து மகளிர் நிலைய போலீசார் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர். இதை அடுத்து, விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 3 மாணவர்கள் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.