டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 18வது லீக் போட்டியில் கோவை மற்றும் நெல்லை அணிகள் மோத உள்ளன. நெல்லையில் உள்ள மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. நெல்லை அணி 4 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இன்று வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற நெல்லை முயற்சிக்கக்கூடும். கோவை அணி ஆடிய 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருப்பதால் இன்றையப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.