இந்தியாவுக்கு முதல் மகுடத்தை சூட்டப்போவது யார்? விறுவிறுப்பாக பார்க்கும் உலகம்

Update: 2025-07-27 02:56 GMT

மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டியில் 2 இந்தியர்கள்

மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டியில் இரு இந்தியர்கள் மோதுவதால் கோப்பையை இந்தியா முதல்முறையாக வெல்வது உறுதியாகியுள்ளது.

3 வது மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. தொடரின் இறுதி போட்டியில் இந்திய செஸ் வீராங்கனைகள் கொனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் விளையாடினர். இந்திய வீராங்கனைகள் மோதிய இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் நடந்தது. இதில் துவக்கம் முதல் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து, இவர்கள் இடையிலான 2வது ஆட்டம் இன்று( ஜூலை 27) நடக்கிறது. இறுதி ஆட்டத்தில் இரு இந்திய வீராங்கனைகள் மோதுவதால் பெண்கள் செஸ் உலகக் கோப்பையை இந்தியா முதல்முறையாக வெல்வது உறுதியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்