TNPL | CSG VS SMP | LKK VS SS || டி.என்.பி.எல் தொடர் - இன்று 2 லீக் போட்டிகள்
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் மதியம் 3.15 மணிக்கு தொடங்கும் 25வது லீக் போட்டியில் சேப்பாக் மற்றும் மதுரை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சேப்பாக் அணி தொடர்சியாக 6 வெற்றிகளை வசப்படுத்தியுள்ள நிலையில் 7வது வெற்றிக்கு இலக்கு வைத்துள்ளது.
இரவு 7.15 மணிக்கு தொடங்கும் 26வது லீக் போட்டியில் கோவை மற்றும் சேலம் அணிகள் மோத உள்ளன... புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள கோவை அணி ஆறுதல் வெற்றிக்கு முயற்சிக்கக் கூடும். சேலம் அணி பிளே-ஆஃப் வாய்ப்புக்கு போராடும் என்பதால் இந்தப் போட்டி மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.