TNPL Issue | Ball Tampering செய்ததா அஸ்வின் அணி? - வெடித்த பூகம்பம்.. கிடைத்ததா ஆதாரம்?
TNPL Issue | Ball Tampering செய்ததா அஸ்வின் அணி? - வெடித்த பூகம்பம்.. கிடைத்ததா ஆதாரம்?
TNPL தொடரில் அஸ்வினின் திண்டுக்கல் டீம் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில் TNCA விளக்கம்
டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.
டிஎன்பிஎல் லீக் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தியதாக மதுரை அணி புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருப்பதாக டி.என்.பி.எல் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மதுரை அணி குற்றம்சாட்டிய துண்டுகள் டி.என்.சி.ஏ மூலம் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டவை என்றும், நடுவர்கள் குழு, போட்டி முழுவதும் பந்தை மேற்பார்வையிட்டதாகவும்
ஆட்டத்தின் போது எந்த புகாரும் எழுப்பப்படவில்லை.... மதுரை அணியால் சரியான ஆதாரமும் வழங்கப்படவில்லை..... யூகத்தின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக டி.என்.சி.ஏ கூறியுள்ளது.
புகார் அளித்துள்ள அணியிடம் நம்பகமான மற்றும் சரிபார்க்கக்கூடிய ஆதாரங்கள் இருந்தால், சுதந்திரமான தனிப்பட்ட விசாரணை ஆணையத்திற்கான முறையான கோரிக்கையை உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கலாம் என்றும்,
ஆதாரமற்ற அல்லது அவதூறான குற்றச்சாட்டுகள் டி.என்.சி.ஏ செயல்பாட்டு விதிகளின்கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.