டி.என்.பி.எல் திருவிழா - இன்று 2 லீக் போட்டிகள்
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. சேலத்தில் பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும் 10வது லீக் போட்டியில் சேப்பாக் மற்றும் கோவை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வென்றுள்ள சேப்பாக் அணி, ஹாட்ரிக் வெற்றிக்கு இன்று முனைப்பு காட்டும்...
இரவு 7.15 மணிக்கு சேலத்தில் தொடங்கும் 11வது லீக் போட்டியில் திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள் மோத இருக்கின்றன. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் 2வது வெற்றியைப் பதிவு செய்ய இரு அணிகளும் போராடும் என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக நகரக்கூடும்...