அட்டகாசமாக ஆரம்பமான TNPL.. முதல் போட்டியில் துவம்சமான கோவை

Update: 2025-06-06 03:18 GMT

டி.என்.பி.எல் தொடரின் முதல் போட்டியில் கோவையை வீழ்த்தி நடப்பு சாம்பியன் திண்டுக்கல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக பாலசுப்பிரமணியம் சச்சின் 51 ரன்களும், ஷாருக்கான் மற்றும் ஆன்ட்ரே சித்தார்த் (andre siddarth) தலா 25 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 150 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய திண்டுக்கல் அணியில் தொடக்க வீரர் ஷிவம் சிங் (shivam singh) அபாரமாக ஆடி 82 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால், 18வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்த நிலையில் இலக்கை எட்டிய திண்டுக்கல் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்