TNPL 2025 | மதுரையை பந்தாடிய திருப்பூர் அணி - 10 ஓவரிலே மேட்ச்சை முடித்து அதகளம்
TNPL-ல் மதுரையை பந்தாடிய திருப்பூர் அணி - 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
TNPL கிரிக்கெட்டில் மதுரை பாந்தர்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது. முதலாவதாக பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 120 ரன்களை குவித்து இருந்திருந்தது. இதில், திருப்பூர் அணியின் ஆர்.சிலம்பரசன், சுழற்பந்து வீச்சாளரான கேப்டன் சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்ததாக களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி, 10.1 ஓவர்களில் வெறும் ஒரு விக்கெட்டுக்கு, 124 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில், அமித் சாத் விக்71 ரன்களும், துஷர் ரஹேஜா 40 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதனால், 3வது வெற்றியை பதிவு செய்த திருப்பூர் அணி, 6 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. இதேபோல, மதுரைக்கு இது 3-வது தோல்வியாகும்.