சேப்பாக்கை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த திருப்பூர் தமிழன்ஸ்

Update: 2025-07-02 02:39 GMT

டிஎன்பிஎல் முதல் தகுதி சுற்றில் சேப்பாக் அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ், பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் செய்த திருப்பூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய சேப்பாக் அணி 16 புள்ளி 1 ஓவர்களில் 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இதன்படி ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் முதல் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்