``இது நல்லதல்ல'' - ரிஷப் பண்ட் ஆத்திரம்

Update: 2025-07-10 02:27 GMT

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான

மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் 4 ஆண்டுக்குப் பின் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாட இருப்பதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் (Dukes) பந்துகள் மிக விரைவாக வடிவத்தை இழந்து வருவதாகவும், இது ஆட்டத்திற்கு நல்லதல்ல என்றும் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார். இத்துடன் இந்திய அணியில் ஆர்ஸ்தீப் சிங் சேர்க்கப்படலாம் எனவும் தெரிகிறது. இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆட்டத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்