செம்ம சம்பவம் இருக்கு - பொறி பறக்க போகும் இன்றைய போட்டி

Update: 2025-05-23 02:54 GMT

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 65வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. லக்னோ ஏகனா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் பெங்களூரு ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. 8வது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் வெளியேறிவிட்டது. இன்றையப் போட்டியில் பெங்களூரு வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும்... லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களில் ஒன்றைப் பெறுவதற்கு பெங்களூரு அணிக்கு இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்