TNPL 2025 | கடைசி பாலில் நடந்த ட்விஸ்ட்...சிக்ஸ் அடித்து மேஜிக் செய்த வருண்
TNPL கிரிக்கெட் 19-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் உடன் மோதியது. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதில், முதலில் விளையாடிய சேலம் அணியின் விக்கெட் கீப்பர் கவின் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். கடைசி 5 ஓவர்களில் 67 ரன்கள் திரட்டிய சேலம் அணி, இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்களை குவித்தது. இதனிடையே, ஸ்பீட் பவுலரான பெரியசாமி வீசிய 4 ஓவர்களில், 5 சிக்சர் உள்பட சேலம் அணிக்கு 70 ரன்களை அள்ளித் தந்தது. TNPL-ல், இதுவே மோசமான பந்துவீச்சு எனக் கூறப்பட்டது. அடுத்ததாக,189 ரன் இலக்குடன் ஆடிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் அஸ்வினும், ஷிவம் சிங்கும் முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து நல்ல opening தந்தனர். 20 ஓவர் முடிவில், திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்புக்கு கடைசி பந்தில் வருண் சக்ரவர்த்தி அடித்த சிக்சர், 192 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி தேடித் தந்தது. இது திண்டுக்கல் அணிக்கு 3-வது வெற்றியாகும். சேலத்துக்கு இது 3-வது தோல்வியாகும்.