நார்வே செஸ் தொடரில் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சன் (magnus carlson) சாம்பியனாகி உள்ளார். 9வது சுற்றின் முடிவில் கார்ல்சன் 15 புள்ளிகளுடனும் உலக சாம்பியன் குகேஷ் 14 புள்ளி 5 புள்ளிகளுடனும் இருந்தனர். கடைசி சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகேசியை எதிர்கொண்ட கார்ல்சன்,, கிளாசிக்கல் (classical) சுற்றில் சமன் செய்து அர்மகெடான் (Armageddon) சுற்றில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் 1 புள்ளியை கார்ல்சன் பெற்ற சூழலில், கடைசி சுற்றில் குகேஷ், அமெரிக்க வீரர் கருவானாவிடம் (Caruana) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் சாம்பியன் ஆகும் வாய்ப்பை குகேஷ் இழந்த நிலையில் 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த கார்ல்சன், 7வது முறையாக நார்வே செஸ் தொடரில் வெற்றிவாகை சூடினார். கருவானா 2ம் இடத்தையும், குகேஷ் 3ம் இடத்தையும் பிடித்தனர்.