சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த இந்திய மகளிர் அணிக்கு இன்று காத்திருக்கும் சவால்
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. தொடரை வெல்ல இந்தியாவும், தொடரில் நீடிக்க இங்கிலாந்தும் கடுமையாக முயற்சிக்கும் என்பதால் போட்டி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.