பின்னர் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்தியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாய் அமைந்தது. முதல் இன்னிங்சில் சதமடித்த ஜெய்ஸ்வால் 4 ரன்களில் வெளியேறினார். கே.எல்.ராகுல், சாய் சுதர்சன் இணை நிதானமாக விளையாடியது. ஸ்கோர் 82 ஆக உயர்ந்தபோது 30 ரன்களில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 47 ரன்களுடனும், சுப்மன் கில் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.