அங்கீகரிக்கப்படாத நாடுகளின் கால்பந்து தொடரில் தமிழீழம் சாம்பியன்
இங்கிலாந்தில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையான கோனிஃபா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கிழக்கு துர்கிஸ்தான் அணியை வீழ்த்தி தமிழ் ஈழம் அணி கோப்பையை வென்றுள்ளது. லண்டனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய தமிழீழம் அணி ஐந்துக்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. வெற்றிக்கு பிறகு தமிழீழ அணி வீரர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடிய வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.