``ஒன்னா போலாம்.. ஒன்னா போலாம்'' - லக்னோ கையை பிடித்து வெளியே கூட்டி சென்ற ஐதராபாத்
ஐ.பி.எல் போட்டியின் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய ஐதராபாத்18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் லக்னோ அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.