Jadeja | Sanju Samson | CSK ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ளவே முடியாத பேரதிர்ச்சி?

Update: 2025-11-09 15:24 GMT

ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணியிடம் ஜடேஜாவை கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. டிசம்பரில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற உள்ள நிலையில், இணையதளத்தில் பரவி வரும் இந்த தகவலால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ராஜஸ்தான் தரப்பு ஜடேஜா மட்டுமன்றி அதிரடி வீரரான டிவால்ட் பிரெவிசையும் கேட்பதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அனைத்து அணிகளும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏல தேதி டிசம்பர் 15ஆம் தேதி இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்