International Masters League டி20 தொடரின் முதல் போட்டியில், இலங்கையை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. நவி மும்பையில் நடந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணியும், சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணியும் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 222 ரன்கள் குவித்தது. Stuart Binny, Yusuf Pathan ஆகியோர் அரைசதம் அடித்தனர். மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 218 ரன்கள் எடுத்த நிலையில், 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.