"752 ரன்களா.. Extraordinary".. கிரிக்கெட் உலகில் அதிசயம்.. சச்சினையே வியக்க வைத்த கருண் நாயர்
உள்ளூர் போட்டிகளில் அபாரமாக விளையாடி வரும் கருண் நாயரை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார். அவரது சமூக வலைதள பதிவில், விஜய் ஹசாரே தொடரில் வெறும் 7 இன்னிங்ஸில் 5 சதங்களுடன் 752 ரன்கள் எடுத்துள்ளது மிகவும் அசாதாரணமானது என புகழ்ந்துள்ளார். இவை வழக்கமாக நடப்பது அல்ல எனவும், கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் சாத்தியப்பட்டுள்ளதாக கருண் நாயரை பாராட்டியுள்ளார். மேலும், கிடைக்கும் வாய்ப்புகளை தொடர்ந்து சரியாக பயன்படுத்தி முன்னேறுமாறு கருண் நாயரை சச்சின் வாழ்த்தியுள்ளார்.