நான் ரெடி, நீங்க ரெடியா? - மீண்டும் களத்தில் சச்சின்

Update: 2025-02-17 20:53 GMT

சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்துங்குற விஜயின் BADASS பாட்டோட LYRICS இவருக்கு பக்காவா பொருந்தும்..

கிரிக்கெட்டோட கடவுளா பல கோடி பேருக்கு தரிசனம் கொடுத்த சச்சின் டெண்டுல்கர், ஓய்வுக்கு பிறகு லெஜன்ட்ஸ் போட்டி, ROAD SAFETY போட்டியில மட்டும் விளையாடி வராரு.

சச்சின் விளையாடுறாருனா அதை பார்க்கவே ஓடோடி போற சனம் ஏராளம்.,. அந்த கூட்டத்தை மகிழ்விக்கும் விதமா, சச்சின் மீண்டும் களத்துல இறங்க தயாராகி இருக்காரு..

லெஜன்ட்ஸ் விளையாடும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக், வரும் 22ஆம் தேதி தொடங்க இருக்குது. இதுக்காக நான் ரெடி? நீங்க ரெடியானு கேள்வி கேட்டு சச்சின் போட்ருக்க பதிவு ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கு....

Tags:    

மேலும் செய்திகள்