உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா | Praggnanandhaa | Gukesh
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் (tata steel chess) தொடரில் தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 13 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் உலக சாம்பியன் குகேஷும் பிரக்ஞானந்தாவும் தலா 8 புள்ளி 5 புள்ளிகள் பெற்று சமனிலை வகித்தனர். இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது. அதிலும் இரு சுற்று முடிவில் இருவரும் சமனிலை வகித்தனர். இதனால் Sudden death முறை பின்பற்றப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற அந்த சுற்றில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டத்தையும் தன்வசப்படுத்தினார்.