Para Badminton | Udhayanidhi Stalin | தங்கம் வென்று உலகை வியக்கவிட்ட தமிழர்கள்
பாரா பேட்மிண்டனில் தங்கம் வென்ற தமிழக வீரர்கள் - உதயநிதி வாழ்த்து
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பாரா பேட்மிண்டனில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விக்டோரியாவில் நடைபெற்ற பாரா பேட்மிண்டனில், தமிழக வீரர்கள் இந்தியாவுக்காக 6 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று மீண்டும் வரலாறு படைத்துள்ளனர் என பெருமிதம் தெரிவித்துள்ள அவர், பாரா நட்சித்திரங்கள், சிவராஜன், சாருமதி, சுதர்சன், ருத்திக், ஜெகதீஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் தமிழகத்தை பெருமை படுத்தியுள்ளதாக தன் மனமார்ந்த வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.