ந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ்க்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில், பென் டக்கட் BEN DUCKETT விக்கெட்டை வீழ்த்திய பிறகு, அவரது அருகே சென்று மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடினார்.
இதன்மூலம் ஐசிசி நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி சிராஜின் போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இதோடு சிராஜ்க்கு 2வது முறையாக DEMERIT புள்ளி வழங்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட 24 மாத காலக்கட்டத்தில் கூடுதலாக 2 புள்ளிகளை பெற்றால் அவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.