Neeraj Chopra Campeón | ஆஸ்ட்ரவா கோல்டன் ஸ்பைக் - நீரஜ் சோப்ரா சாம்பியன்

Update: 2025-06-25 03:48 GMT

ஆஸ்ட்ரவா கோல்டன் ஸ்பைக் (Ostrava Golden Spike) ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தியுள்ளார். செக் குடியரசு நாட்டில் உள்ள ஆஃடன்ரவா நகரில் கோல்டன் ஸ்பைக் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 பேர் கலந்து கொண்டனர். 6 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், அதிகபட்சமாக 85.29 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். அவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரனடா (Grenada) வீர‌ர்கள் இரண்டு மற்றும் 3வது இடங்களை பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்