ஐசிசி ஒருநாள் தரவரிசை - ரோகித் சர்மா 2வது இடம்
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வாரந்தோறும் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டு வரும் நிலையில், ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் 784 புள்ளிகளுடன் இந்திய துணை கேப்டன் சுப்மன் கில் முதல் இடத்தில் நீடிக்கிறார். நட்சத்திர வீரர் விராட் கோலி 4வது இடத்திலும், ஸ்ரேயஸ் ஐயர் 8வது இடத்திலும் நீடிக்கின்றனர். டி20 பேட்டர் தரவசையில் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடம்பிடித்துள்ளார்.