கூடுகிறது பிசிசிஐ பொதுக்குழு - விரைவில் முடிவு
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வரும் 28ஆம் தேதியில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிசிசிஐயின் 94-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், அதன் மும்பை தலைமை அலுவலகத்தில் வருகிற 28-ஆம் தேதி நடக்க உள்ளது. 2022 ஆம் ஆண்டு முதல், தலைவராக இருந்து வந்த ரோஜர் பின்னி, இந்த மாத தொடக்கத்தில் பதவி விலகினார். இதனால் தற்போது தலைவர் காலியாக உள்ள தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.