“எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும்”.. தோனியை வெளுத்து வாங்கிய சேவாக் - என்ன சொன்னார் தெரியுமா?

Update: 2025-04-01 07:32 GMT

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 ஆவது வரிசையில் களமிறங்கிய தோனி 16 பந்துகளில் 31 ரன்களை எடுத்திருந்தார். இதனால் தோனி முன்வரிசையில் இறங்க வேண்டுமென ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி முன்னதாக களமிறக்கப்பட்டார். இருப்பினும் 16 ரன்களை மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்த நிலையில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், தோனியால் பத்து ஓவர்களில் நின்று விளையாட முடியாது, போட்டியின் தன்மையை பொறுத்தே அவர் விளையாட விரும்புவதாக கூறியுள்ளார். இதனிடையே, இந்த வயதில் தோனி ஐபிஎல் விளையாடுவதை நிறுத்திவிட்டு கமெண்டரி செய்ய தங்களுடன் இணைய வேண்டும் என முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், தற்போது ஐபிஎல் வர்ணனையாளருமான மேத்யூ ஹைடன் ஹெய்டன் தெரிவித்துள்ளார். இதேபோல், எல்லா நேரங்களிலும் ஒரு வீரரால் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க முடியாது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திரா சேவாக்கும் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்