இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சர்வதேசப் போட்டியில் விளையாடினார். கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட முகமது ஷமி, ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். சமீபத்தில் முழு உடற்தகுதியை எட்டி, இந்திய அணியில் முகமது ஷமி மீண்டும் இடம்பிடித்தார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடித்த முகமது ஷமி, 3 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 25 ரன்களை வழங்கினார்.