பேபி ABD-யின் இதயத்தை சுக்குநூறாக உடைத்த மேக்ஸ்வெல் - கடைசி பந்து வரை திக்..திக்..

Update: 2025-08-17 04:46 GMT

மேக்ஸ்வெல் அதிரடி - ஆஸி., திரில் வெற்றி - தொடரை வென்றது

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரையும் வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கெயிர்ன்ஸ் CAIRNS நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, பிரவீஸ் BREVIS அதிரடி அரைசதத்தால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் அரைசதம் அடித்து அதிரடி தொடக்கம் கொடுத்தார்.

இருப்பினும் 122 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியபோது, அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல், ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 62 ரன்களை விளாசி, கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இதன்மூலம், 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்றது.

Tags:    

மேலும் செய்திகள்