கார்ல்சனை வீழ்த்தி குகேஷ் அபாரம் - தோற்றதும் ஆத்திரத்தில் மேடையில் குத்திய கார்ல்சன்

Update: 2025-06-02 06:11 GMT

நார்வே செஸ் தொடரின் 6வது சுற்றில் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை (Magnus Carlsen ), உலக சாம்பியன் குகேஷ் வீழ்த்தினார். ஸ்டாவேங்கர் (Stavanger) நகரில் நடைபெற்ற போட்டியில் குகேஷ் வெள்ளை நிறக் காய்களுடனும், கார்ல்சன் கருப்பு நிறக் காய்களுடனும் களமிறங்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் குகேஷ் கார்ல்சனை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். குகேஷிடம் தோல்வி அடைந்த பிறகு ஆத்திரத்தில் மேஜையை கார்ல்சன் குத்தினார். கிளாசிக்கல் செஸ் போட்டியில் முதல் முறையாக கார்ல்சனை வென்று குகேஷ் அசத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்