ருத்ரதாண்டவமாடிய கிளாசென் - போகிற போக்கில் கொல்கத்தாவை சம்பவம் செய்த SRH

Update: 2025-05-26 02:41 GMT

ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதரபாத் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். அபிஷேக் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழக்க, ஹெட்(Head), கிளாசென் (Klaasen)ஜோடி பவுண்டரி மழை பொழிந்தது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில் 76 ரன்களில் ஹெட் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ருத்ர தாண்டவமாடிய கிளாசென் வெறும் 37 பந்துகளில் சதம் விளாசி அதகளப்படுத்தினார். இஷான் கிஷானும் (Ishan Kishan), அனிகேத் வர்மாவும் பங்களிக்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் 278 ரன்கள் குவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்