IPL 2025 RCB Vs DC || ஒற்றை விக்கெட்டால் தலைகீழாய் மாறிய மேட்ச் - RCB-யை கதறவிட்ட ராகுல்

Update: 2025-04-11 05:21 GMT

பெங்களூரு சின்னசாமி மைதானத்துல நடந்த இந்த போட்டியில முதல்ல பேட்டிங் பண்ண பெங்களூருக்கு பில் சால்ட் Phil Salt - கோலி Kohli ஜோடி அட்டகாசமான தொடக்கம் கொடுத்தாங்க... 3 ஓவர்லயே 50 ரன் குவிச்சு பெங்களூரு மிரட்டுச்சு...

சால்ட் 37 ரன்னுல ரன்-அவுட் run-out ஆனதுக்கு அப்றோம் பெங்களூருக்கு பிரச்சினையும் ஸ்டார்ட் ஆச்சு... படிக்கல் Padikkal, கோலி, லிவிங்ஸ்டன்னு Livingstone அடுத்தடுத்த விக்கெட்டுகளயும் பெங்களூரு இழந்துச்சு...

கேப்டன் பட்டிதாரும் பெருசா பங்களிக்காத நிலைல, இறுதிக்கட்டத்துல டிம் டேவிட்டோட Tim David கேமியோவால cameo 20 ஓவர் முடிவுல 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்துச்சு பெங்களூரு...

அடுத்து 164 ரன் இலக்க நோக்கி ஆடுன டெல்லி அணியில டூபிளஸ்ஸி du Plessis, ஃப்ரேஸர் மெக்கர்க் Fraser-McGurk, அபிஷேக் போரல்னு Abishek Porel மூனு பேரும் ஒற்றை இலக்கத்துல ஆட்டமிழந்து அந்த அணிக்கு அதிர்ச்சி அளிச்சாங்க...

கேப்டன் அக்சர் படேலும் 15 ரன்னுக்கு ஆட்டமிழக்க டெல்லி தடுமாறுச்சு... அப்போ 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் KL Rahul, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் Tristan Stubbs இணை ஆரம்பத்துல நிதானமா விளையாடி பார்ட்னர்ஷிப்ப partnership கட்டமைச்சாங்க...

சிறப்பான ஆட்டத்த வெளிப்படுத்துன லோக்கல் பாய் local boy கே.எல்.ராகுல் அரைசதம் அடிச்சு அசத்துனாரு...

ரென்டு பேரும் விக்கெட் stand பன்ன பிறகு போகப்போக அதிரடியா ஆட,, ஆட்டம் டெல்லி பக்கம் வந்துச்சு... இறுதில 18வது ஓவர்ல இலக்க எட்டுன டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்துல அபார வெற்றி பெற்றுச்சு...

கே.எல்.ராகுல் - ஸ்டப்ஸ் இணை 5வது விக்கெட்டுக்கு 111 ரன் பார்ட்னர்ஷிப் அமைச்சு டெல்லிக்கு தொடர்ச்சியா 4வது வெற்றிய தேடித் தந்துருக்காங்க... 93 ரன் அடிச்சு ஆட்டமிழக்காம இருந்த கே.எல்.ராகுல், என்னோட home groundல நான் தான் கிங்குன்னு சொல்லாம சொல்லி இருக்காரு... 

Tags:    

மேலும் செய்திகள்