நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஜூனியர் பிரிவு.. தங்கத்தை தூக்கிய இந்தியா

Update: 2025-08-24 02:02 GMT

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்- இளவேனில் வாலறிவன் அசத்தல்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை இளவெனில் வாலறிவன் மீண்டும் தங்கம் வென்று அசத்தி உள்ளார். கஜகஸ்தான் நாட்டின் ஷிம்கென்ட் நகரில், 16வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றது. இதில் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன், அர்ஜுன் பாபுடா இணை சீன அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. முன்னர் நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் மகளிர் தனிநபர் பிரிவிலும் இளவேனில் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்