டெஸ்ட்டில் அதிக ரன்கள் - பாண்டிங்கை முந்தி ஜோ ரூட் சாதனை
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்திற்கு இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முன்னேறி உள்ளார். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசி அசத்தினார். இந்தப் போட்டியில் 150 ரன்கள் குவித்த ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 13 ஆயிரத்து 409 ரன்கள் அடித்துள்ளார். அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில்,, 13 ஆயிரத்து 378 ரன்களுடன் உள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை முந்தி டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார்.