சச்சின் மகனுக்கு விரைவில் டும் டும் டும்?
சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் பேத்திக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 25 வயதான அர்ஜுன் டெண்டுல்கருக்கும் புகழ்பெற்ற இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் மற்றும் புரூக்ளின் கிரீமரி ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமையாளருமான ரவி காய் என்பவரின் பேத்தியான சானியா சந்தோக்-விற்கும் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து இரு தரப்பிலும் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.