இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் தோனி?
இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக பணியாற்ற ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of farme) விருது பெற்ற எம்.எஸ் தோனிக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக பணியாற்ற எம்.எஸ் தோனிக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஆடவர் அணி மட்டுமல்லாமல் மகளிர் கிரிக்கெட் அணி, அண்டர்-19 என அனைத்து கிரிக்கெட் அணிகளுக்குமான ஆலோசகராக தோனி பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தோனி பிசிசிஐ-க்கு பதிலளித்த பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.