மீண்டும் தொடங்கும் ஐபிஎல் - RCB-யின் பயங்கர ஃபார்ம் தொடருமா?

Update: 2025-05-17 03:04 GMT

இந்தியா - பாகிஸ்தான் மோதலால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஐபிஎல் தொடர் இன்று மீண்டும் தொடங்குகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருத்தில்கொண்டு சுமார் ஒரு வார காலத்திற்கு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், புதிய அட்டவணையின்படி எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடங்குகின்றன. இதன்படி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் 58வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. இன்று வெற்றி பெற்றால் முதல் அணியாக பெங்களூரு பிளே-ஆஃப் சுற்றுக்குள் கால்பதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்