ஐபிஎல் லீக் போட்டில மும்பைய 12 ரன்கள் வித்தியாசத்துல வீழ்த்தி இருக்கு லக்னோ....
லக்னோ ஏகனா மைதானத்துல நடந்த இந்த போட்டில முதல்ல பேட்டிங் பன்ன லக்னோ அணிக்கு மிட்ச்செல் மார்ஷ் Mitchell Marsh, மார்க்ரம் Markram இணை அட்டகாசமான தொடக்கம் தந்தாங்க...
பவுண்டரிகள விளாசி பட்டய கிளப்புன மார்ஷ் 31 பந்துல 60 ரன் அடிச்சு ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிகோலஸ் பூரன pooran மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா அவுட் ஆக்குனாரு... ஃபார்ம் அவுட்ல இருக்குற ரிஷப் பண்ட் Rishabh Pant விக்கெட்டயும் பாண்டியாவே எடுத்தாரு,....
மறுமுனைல நிலைச்சு நின்னு ஆடுன மார்க்ரம் அரைசதம் அடிக்க, ஆயுஷ் பதோனி Ayush Badoni, டேவிட் மில்லர் David Miller பங்களிச்சாங்க... இதனால 20 ஓவர் முடிவுல 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவிச்சுச்சு லக்னோ...
அபாரமா பந்துவீசுன மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகள வீழ்த்தி, ஐபிஎல் வரலாற்றுல 5 விக்கெட்ட வீழ்த்துன முதல் கேப்டன்னு சாதனை படைச்சாரு...
தொடர்ந்து 204 ரன்கள் இலக்க நோக்கி ஆடுன மும்பை அணில தொடக்க வீரர்கள் வில் ஜாக்ஸும் Will Jacks, ரிக்கல்டனும் Rickelton சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்து ரசிகர்கள ஏமாற்றம் தந்தாங்க...
3வது வீரரா இறங்குன நமன் தீர் Naman Dhir அதிரடியா விளையாடி மும்பையோட ஸ்கோர உயர்த்துனாரு... அவரோட சூர்யகுமார் யாதவும் Suryakumar Yadav பவுண்டரிகள விரட்டுனாரு.....
46 ரன்னுல நமன் தீர் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடிச்சாரு...
மறுமுனைல திலக் வர்மா பொறுமையா விளையாட தேவைப்படும் ரன்ரேட் மும்பைக்கு அதிகரிச்ச நிலைல, 67 ரன்னுக்கு ஆவேஷ் கான் Avesh Khan ஓவர்ல கேட்ச் ஆனாரு சூர்யகுமார் யாதவ்... ஸ்கை SKY விக்கெட் போட்டில திருப்புமுனையா அமைஞ்சுச்சு...
அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, பவர் ஹிட்டிங்க்கு முயற்சி பன்ணாலும் டெத் DEATH ஓவர்ஸ்ல லக்னோ பவுலர்கள் அற்புதமா பந்துவீசுனாங்க...
18வது ஓவர வீசுன திக்வேஷ் DIGVESH 11 ரன் கொடுக்க, 19வது ஓவர வீசுன ஷர்துல் தாகூர் Shardul Thakur வெறும் 7 ரன்கள் மட்டும் கொடுத்தாரு... அந்த ஓவர்ல பெரிய ஷாட் அடிக்க முடியாததால திலக் வர்மா retired out ஆகி மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிச்சாரு...
கடைசி ஓவர்ல மும்பை வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டுச்சு... கடைசி ஓவர ஹர்திக் பாண்டியா எதிர்கொள்ள ஆவேஷ் கான் செம்மையா பந்துவீசி defend பண்ணாரு, அந்த ஓவர்ல 9 ரன் மட்டுமே மும்பை எடுக்க, 12 ரன் வித்தியாசத்துல போட்டில லக்னோ ஜெயிச்சு, இந்த சீசன்ல 2வது வெற்றிய பதிவு பண்ணுச்சு..