'விராட் காட்டிய வாணவேடிக்கை!' Hardik Pandya-வின் போராட்டம் வீண்! RCB மிரட்டல் வெற்றி

Update: 2025-04-08 03:20 GMT

ஐபிஎல் தொடர்ல பரபரப்பா நடைபெற்ற லீக் போட்டில மும்பைய 12 ரன்கள் வித்தியாசத்துல பெங்களூரு சாச்சுருக்கு..

மும்பை வான்கடே மைதானத்துல நடந்த இந்த போட்டில முதல்ல பேட்டிங் பண்ண பெங்களூரு அணியில சால்ட் salt 4 ரன்னுக்கு ஆட்டமிழந்தாலும் 2வது விக்கெட்டுக்கு கோலி-படிக்கல் இணை அதிரடியா விளையான்டாங்க,....

29 பந்துகள்ல அரைசதம் அடிச்சு அசத்துனாரு கோலி...

படிக்கல் 37 ரன்னுக்கு விக்னேஷ் புத்தூர் ஓவர்ல ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ரஜத் பட்டிதார் கோலியோட சேர்ந்து அதிரடி காட்டுனாரு...

67 ரன்களுக்கு கோலி,, ஹர்திக் பாண்டியா பவுலிங்ல கேட்ச் ஆக, அதே ஓவர்ல லிவிங்ஸ்டன் விக்கெட்டயும் எடுத்தாரு பாண்டியா...

5வது விக்கெட்டுக்கு ரஜத் பட்டிதாரும் ஜித்தேஷ் சர்மாவும் மிரட்டலான ஆட்டத்த வெளிப்படுத்துனாங்க...

பட்டிதார் 64 ரன்னும், ஜித்தேஷ் சர்மா 40 ரன்னும் எடுக்க 20 ஓவர்கல்ல 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவிச்சுச்சு பெங்களூரு...

அடுத்து 222 ரன்னுன்ற கடினமான இலக்க நோக்கி ஆடுன மும்பை அணில ஓப்பனர்கள் ரோகித் சர்மாவும் ரிக்கல்டனும் தலா 17 ரன் எடுத்து ஆட்டமிழந்தாங்க...

வில் ஜாக்ஸ் 22 ரன்னும் சூர்யகுமார் யாதவ் 28 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தாலும்,,, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஜோடி பட்டய கிளப்புச்சு...

தான் சந்திச்ச முதல் பந்தயே சிக்சருக்கு அனுப்பி கெத்து காட்டுனாரு மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா...

ஹேசில்வுட் மற்றும் தன்னோட அண்ணன் க்ருணல் பாண்டியா ஓவர பதம் பார்த்தாரு ஹர்திக் பாண்டியா... ராக்கெட் வேகத்துல ஸ்கோர் எகுற இலக்க நோக்கி பயணிச்சுச்சு மும்பை...

மறுமுனைல அரைசதம் அடிச்சு முந்தைய போட்டில retired out பண்ண வச்சதுக்கு பதிலடி கொடுத்தாரு திலக் வர்மா...

56 ரன்னுல புவனேஸ்வர் குமார் ஓவர்ல திலக் கேட்ச் ஆன நிலைல, கடைசி 2 ஓவர்ல மும்பை வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டுச்சு,...

19வது ஓவர வீசுன ஹேசில்வுட், ஹர்திக் பாண்டியா விக்கெட்ட முதல் பந்துலேயே எடுக்க, அது பெங்களூருக்கு திருப்புமுனைய தந்துச்சு,.,..

வந்த சான்ட்னர் சிக்ஸ் அடிச்சாலும் அந்த ஓவர்ல வெறும் 9 ரன்கள மட்டும் தந்து நெருக்கடி கொடுத்தாரு ஹேசில்வுட்...

க்ருணல் பாண்டியா வீசுன கடைசி ஓவர்ல 19 ரன் தேவைப்பட சிக்சருக்கு முயற்சி பண்ண மும்பை பேட்டர்கள் பவுண்டரி லைன்ல கேட்ச் ஆனாங்க...

கடைசி ஓவர்ல 3 விக்கெட்ட க்ருணல் பாண்டியா வீழ்த்த, 20 ஓவர் முடிவுல 9 விக்கெட்ட இழந்து 209 ரன் மட்டுமே மும்பை எடுத்துச்சு... பரபரப்பான போட்டில 12 ரன்கள் வித்தியாசத்துல பெங்களூரு ஜெயிச்சுச்சு,....

சுமார் 10 வருஷம் கழிச்சு வான்கடேல வெற்றிவாகை சூடி ரசிகர்கள கொண்டாட வைச்சுருக்கு பெங்களூரு...

Tags:    

மேலும் செய்திகள்