IPL 2025 - ராஜஸ்தான் VS பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

Update: 2025-04-13 07:54 GMT

ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. ஜெய்ப்பூரில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில், லக்னோ மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்வியில் இருந்து மீண்டும் வர மும்பை அணி போராடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்