தீவிர பயிற்சியில் விராட் கோலி - வைரலாகும் வீடியோ | Virat Kohli | Delhi Team
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெல்லி அணியினருடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். 12 வருடங்களுக்கு பிறகு வரும் 30ஆம் தேதி ரயில்வே அணிக்கு எதிராக நடைபெறும் ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி களமிறங்குகிறார். இதற்காக டெல்லி அணி வீரர்களுடன் இணைந்து விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். அணி நிர்வாகம் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்க இருந்ததாகவும், ஆனால் அதனை கோலி தவிர்த்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலி பங்கேற்கும் போட்டி ஜியோ சினிமாவில் நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.