இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து மகளிரணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடைபெற்றபோது, மழை குறுக்கிட்டதால் போட்டி 29ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி, 29 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும், தீப்தி ஷர்மா 30 ரன்களும் எடுத்தனர். அதே நேரத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டதால், DLS முறைப்படி 24 ஓவராக குறைக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு 115 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 21 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடர்,1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.