இந்திய வீரர்களின் அடிமடியிலேயே கைவைத்த BCCI.."இதை கூடவா செய்ய கூடாது"..வருமானத்திற்கே ஆப்பு | INDIA
தொடர்ந்து சொதப்பல் - விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி
அண்மையில் முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரை எப்படியாவது தக்கவைப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணி, மோசமான தோல்வியுடன் தாயகம் திரும்பியது.
அணியின் செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டதோடு, பல மாற்றங்கள் நடக்கலாம் என யூகிக்கப்பட்டது.
அதன்படி, அண்மையில் நடந்து முடிந்த பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில், வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த பிசிசிஐ
அதன்படி, தவிர்க்க முடியாத நேரங்களை தவிர மற்ற சமயங்களில் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போட்டியின் போதும், பயிற்சிக்காக செல்லும் போதும், அனைத்து வீரர்களும் அணியுடன் இணைந்து செல்ல வேண்டும் எனவும், தனியாக குடும்பத்தாருடன் செல்லக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு தொடர்களுக்கு செல்லும் போது 150 கிலோவிற்கு மிகாமல் லக்கேஜை எடுத்து செல்லலாம் எனவும், அதற்கு மேல் எடுத்து சென்றால் செலவை வீரர்களே ஏற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதோடு, வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போது பிசிசிஐ அனுமதியின்றி மேலாளர்கள், சிகை அலங்காரம் செய்வோர், உதவியாளர்கள், பாதுகாவலர்களை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பயிற்சிக்கு சென்றால், முடியும் வரை அணியுடன் இணைந்திருக்க வேண்டும் எனவும்,
கவனம் சிதறுவதை தவிர்க்க தொடரின் போது விளம்பரங்களில் நடிக்கக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதோடு, வெளிநாடு தொடர்களுக்கு குடும்பத்தினரை அழைத்து செல்வதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
45 நாட்களுக்கு மேல் தொடர் நடைபெற்றால், குறிப்பிட்ட இரண்டு வாரங்களுக்கு மட்டுமே குடும்பத்தினருக்கு அனுமதி என்றும்,
அதிலும் தங்கும் செலவை மட்டும் பிசிசிஐ ஏற்கும் எனவும், மற்ற செலவை வீரர்களே ஏற்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, பயிற்சியாளர், கேப்டன் அனுமதிக்கும் தேதிகளில் மட்டும் குடும்பத்தினருடன் தங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ சார்ந்த விளம்பரங்களில் நடிக்க சம்பந்தப்பட்ட வீரர்கள் முன்வரவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே வீரர்களுடன் குடும்பத்தினர் தங்குவதால் அணி தோற்கிறதா என ஒருபக்கம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தற்போது அதிரடியான இந்த புதிய கட்டுப்பாடுகளை வீரர்களுக்கு விதித்திருக்கிறது, பிசிசிஐ..
இவ்வளவு கட்டுப்பாடா? - வீரர்களை நெருக்கும் பிசிசிஐ
உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும்
போட்டியின் போது தனி வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை
வெளிநாடு தொடருக்கு 150 கிலோ லக்கேஜை மட்டுமே எடுத்து செல்ல அனுமதி
வெளிநாடு தொடர்களில் மேலாளர்கள், உதவியாளர்களை அழைத்து செல்ல தடை
பயிற்சி முடியும் வரை அணியுடன் இணைந்திருக்க வேண்டும்
தொடரின்போது, விளம்பரங்களில் நடிக்கக்கூடாது
குடும்பத்தினரை அழைத்து செல்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள்
வெளிநாடு தொடர் - 2 வாரங்களுக்கு மட்டுமே குடும்பத்தினருடன் தங்க அனுமதி
தங்கும் செலவை ஏற்போம் - ஏனைய செலவிற்கு வீரர்களே பொறுப்பு - பிசிசிஐ
பயிற்சியாளர், கேப்டன் அனுமதிக்கும் தேதிகளில் மட்டும் குடும்பத்தினருடன் தங்கலாம்
பிசிசிஐ சார்ந்த விளம்பரங்களில் கட்டாயம் நடிக்க வேண்டும்