IND Vs AUS | Viart Kohli | பதிலடி கொடுப்பாரா விராட் கோலி? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Update: 2025-10-25 03:03 GMT

பத்து மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தனது கடைசி டெஸ்ட்டை விளையாடிய விராட் கோலி, மீண்டும் அதே மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியா உடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளதால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா? விராட் கோலி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதுவரை சிட்னியில் ஏழு போட்டிகள் விளையாடி உள்ள விராட் கோலி வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில்,

சிட்னியில் இதுவரை 19 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதனால் இந்திய அணிக்கும்... விராட் கோலிக்கும்... சிட்னி மைதானம் சவாலான மைதானமாகவே இருந்து வருவதால்...

அதனை மாற்றி எழுதி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வாரா? விராட் கோலி என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்