Ind Vs Aus | ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் இந்தியா - ஆஸி. போட்டி - அதிரப்போகும் மும்பை
மகளிர் உலகக் கோப்பை தொடரில், இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொள்ள உள்ளது. நவி மும்பையில் பிற்பகல் மூன்று மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. காயத்தால் விலகிய, பிரத்திகா ராவலுக்கு பதிலாக, அதிரடி பேட்டர் சஃபாலி வர்மா இந்திய அணியில் இணைந்துள்ளார்.