படுகாயமடைந்த வீரருக்கு பதிலாக மாற்று வீரர் - பிசிசிஐயின் புதிய விதி?
உள்ளூர் போட்டிகளில் பிசிசிஐ ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் முடிந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் ரிஷப் பண்ட் கால் எலும்பு முறிவுடனும், 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் கை தோள்பட்டை காயத்துடனும் பேட்டிங் செய்ய வந்தனர். இதுபோன்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டுள்ள பிசிசிஐ, உள்ளூர் போட்டிகளில் கடுமையான காயத்தால் அவதிபடும் வீரர்களுக்கு CONCUSSION SUB போன்று மாற்று வீரரை களமிறக்க அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.